சென்னைக்கு அருகில் மனதை கொள்ளையடிக்கும் மாமண்டூர் காடு!

எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த காடு, பச்சை நிற அழகிய தெளிவான தண்ணீர், கூழாங்கற்கள் நிறைந்த பாதை என மாமண்டூர் காடு பார்ப்பதற்க்கு ஏதோ அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது .

ஆனால் இந்த இடம் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டது; சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 160 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரிய மரங்கள், தாவரங்கள், மூங்கில் காடுகள், பச்சை நிற தெளிந்த தண்ணீர், அழகான பாதைகள் என முழு இடமும் சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.

இந்த இடத்தை சாதாரண பஸ் போக்குவரத்து மூலம் அணுகுவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, உங்களின் சொந்த கார் அல்லது வேன் மூலம் செல்வது சிறந்தது.

காட்டுப்பகுதியை அடைந்தவுடன் உங்களின் வாகனங்களை பார்க் செய்து விட்டு, என்ட்ரி டிக்கெட் (entry ticket) வாங்கி கொண்டு, நீங்கள் ஜாலியாக காடுகளை சுற்றிப் பார்க்கத் துவங்கலாம்.

இங்கு நடக்கத் துவங்கிய சிறிது தூரத்திலேயே சிறு சிறு ஓடைகள், குளங்கள், கூழாங்கற்கள் பாதை, நெடிந்துயர்ந்த மூங்கில் மரங்கள் என வழி நெடுக இயற்கையின் அழகிய காட்சிகள் உங்களை வரவேற்கும்.

பின்னர் பச்சை நிற, தெளிவான தண்ணீருடன் கூடிய ஆறு உள்ளது. இதன் இரு பக்கமும் அடர்ந்த மரங்கள் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இங்கு நீங்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனும் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன.

மேலும், மாமண்டூர் காட்டில் நீச்சல், ட்ரெக்கிங், சைக்கிளிங், போட்டோகிராபி, நேச்சர் வாக்கிங், ஜங்கிள் சஃபாரி, கேம்பிங் என அட்டகாசமாக செய்து மகிழலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...