பொன்னிற பசு நெய், வெண்ணிற எருமை நெய்... எது ஆரோக்கியமானது?

பொதுவாக உடற்பருமனானவர்கள், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் உணவில் நெய் சேர்க்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துவர்.

ஆனால், தினமும் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை காலை டிஃபன் அல்லது மதிய சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளவதால் மன ஆரோக்கியம் மேம்படுகிறது என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

பசு நெய்யில் கொழுப்பு, கொலஸ்ட்ரால், கொழுப்பு அமிலங்கள், கரோட்டீன் உள்ளிட்டவை உள்ளன. எருமை நெய்யில் கரோடீன் தவிர மற்ற அனைத்தும் உள்ளன.

பல்வேறு வைட்டமின்கள், புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம் உள்ளிட்டவை பசு நெய்யில் உள்ளன. எருமை நெய்யில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.

உடற்பருமனானவர்கள் உடல் எடையை குறைக்க டயட் இருக்கும்போது பசு நெய்யை சிறிதளவு டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் மெலிந்தவர்கள் எடையை அதிகரிக்க எருமை நெய்யை சேர்த்துக்கொள்ளலாம்.

பசு நெய் எளிதில் செரிமானமாகும். ஆனால் எருமை நெய் செரிமானம் ஆக தாமதமாகும். பசு நெய்யின் வாசத்தைக் காட்டிலும் எருமை நெய்யின் வாசம் ஊரையே கூட்டிவிடும்.


குளிர்காலத்தில் எருமை நெய் சாப்பிடுபவர்களுக்கு சருமம் வெடிப்பின்றி பொலிவாக இருக்கும். மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நெய் எது என்றால் அது பசு நெய்தான்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...