நமது உணவில் தவிர்க்க முடியாத அங்கமாக எள் மற்றும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எள்ளெண்ணெய் உள்ளது.

எள்ளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளும்போது இதயம், தசைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இது ரத்த ஓட்டம், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.


கருப்பு எள் விதைகளில் குறிப்பாகக் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் செசமின் மற்றும் செசமோலின் ஆகியவை உள்ளன.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் எள்ளைச் சேர்த்துக்கொள்ளும் போது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

எள்ளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது. இதுதவிர வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது.


எள்ளில் மாங்கனீசு, கால்சியம் சத்துகள் அதிகளவில் உள்ளதால், எலும்புகளை வலுவாக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...