புவியீர்ப்பு விசை செயல்படாத உலகின் விசித்திர இடங்கள்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா க்ரூஸ் பகுதியில் சுமார் 150 அடி சுற்றளவில் மிஸ்டரி ஸ்பாட் அமைந்துள்ளது.

இந்த மர்ம இடத்தில் நீங்கள் அந்தரத்தில் நடந்து செல்வது போல் இருக்கும்.கிட்டதட்ட 60 டிகிரி சாய்ந்து நடப்பது போலவும்,மலை மேல் ஏறுவது போலவும் உணர்வீர்கள்.

லடாக்கின் லே-கார்கில் நெடுஞ்சாலையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மேக்னடிக் ஹில் அமைந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் உங்கள் வாகனத்தை நடுநிலையாக வைத்திருந்தால், அது தானாகவே, மெதுவாக நகரத் தொடங்கும்.மேலும் மணிக்கு 20 கி.மீ., வரை தானாகவே செல்கிறது.

பர்மாவில் உள்ள கியாகிடியோ என்ற தங்கமலை மீது உள்ள குன்று திடீரென விழுவது போன்று தோன்றும். ஆனால் அதே இடத்தில் 2500 ஆண்டுகளாக உள்ளது.

மகாராஷ்டிராவில் டெக்கான் மலைப்பகுதியில் உள்ள அருவியில், காற்றின் திசை மேல் நோக்கி பல மடங்கு வேகமாக சுழல்வதால், தண்ணீரும் மேல் நோக்கியே பாய்கிறது.

நெவாடாவில் உள்ள ஹூவர் அணை சுமார் 221.4 மீ., உயரம் கொண்டது. இந்த அணைக்கு சென்று பாட்டிலில் இருந்து நீங்கள் தண்ணீரை ஊற்றினால், தண்ணீர் துளிகள் கீழே விழாமல் காற்றில் பறந்து கொண்டிருக்கும்.

இந்த அணையின் கட்டமைப்பு காரணமாக காற்று பலமடங்கு வேகமாக மேல்நோக்கி வீசுகிறது. இதன் விளைவாக இதில் ஊற்றும் தண்ணீர் காற்றில் மேல்நோக்கி பறக்கிறது.

மவுண்ட் அராகட்ஸ் துருக்கி மற்றும் அர்மேனியா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு ஒரு காரை நியூட்ரல் போட்டு நிறுத்தினாலும், தானாகவே மலையேறிச் செல்கிறதாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...