எதிர்ப்பை காட்ட டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ் உடை அணிந்தாரா கமல்?

பிக் பாஸ் 6வது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் கமல் அணிந்திருந்த டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ்க்கும், பல்வேறு கருத்துக்கள் எழுகின்றன.

சிலரோ போட்டி முடிவு பிடிக்காததால் தான் கமல் இது போன்ற உடை அணிந்ததாக கூறுகின்றனர்.

ஜீன்ஸ் முதன்முதலில் 1800களின் பிற்பகுதியில் லீவை ஸ்ட்ராஸால் வடிவமைக்கப்பட்டது என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.

இதேபோல ஒரு காலத்தில் டிஸ்டிரஸ்டு ஜீன்ஸும் பேரனான கருதப்பட்டது.

70களில் பிரிட்டனில் மார்கரெட் தாட்சரின் கட்டுப்பாடான கொள்கைகளை நிராகரிக்கும் எதிர் கலாச்சாரத்தை பங்க் இசை மூலம் உருவாக்கப்பட்டது.

அரங்கை அதிர விடும் அந்த பங்க் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த கிழிந்த ஜீன்ஸ்கள் தோன்றிய இடம்.

புரட்சிகர சிந்தனை கொண்ட இளைஞர்கள் இதனை விரும்பி அணிந்தனர்.

கிழிந்த, ஓட்டை ஒடிசலான, நூல்கள் வெளியேறிய, பிற வெளிப்படையான சேதமடைந்த அறிகுறிகளைக் கொண்ட எந்தடெனிமையும் இப்படி அழைக்கலாம்.

இப்போதுப் புரிந்திருக்கும் இந்த டிஸ்டிரஸ்டு டெனிம் கமல் அனிந்ததால் வந்த சர்ச்சையின் பின்னனி.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...