மத்தி மீனில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கொழுப்புச்சத்து மற்றும் தாதுச்சத்துகள் அதிகம் உள்ளது.


இதில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால், உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் முன் கழுத்து கழலை நோய் ஏற்படுவது குறையும்.

மத்தி மீனை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால், தோல் நோய்கள், வயதானோருக்கு வரும் மன அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவைக்கான வாய்ப்பு குறைகிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்தி மீனைச் சாப்பிடும் போது, பார்வை திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாரம் இருமுறை மத்தி மீனைச் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

உடற்பயிற்சி செய்வோர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மத்தி மீனை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

மத்தி மீனில் ஓமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் இதய நோய் வராமல் தடுக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...