சிவனுக்கு நண்டு அர்ச்சனையா ? இதென்ன புதுசா இருக்கு!


குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில், ராம்நாத் கெலா மகாதேவ் சிவன் கோவில் உள்ளது.

இங்கு உயிருள்ள நண்டுகளை காணிக்கையாக செலுத்த ஆண்டுதோறும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நண்டுகளை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தினால் காது தொடர்பான நோய்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்து நாள்காட்டியின்படி, மகர சங்கராந்திக்குப் பிறகு வரும் 'பௌஷ்' மாதத்தின் மங்களகரமான புதன்கிழமை அன்று ஆண்டுதோறும் இந்த விஷேச காணிக்கை செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.

தபி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ராம்நாத் கெலா மகாதேவ் கோவிலின் ஆற்றிலிருந்து உயிருள்ள நண்டுகளை பிடித்து சிவலிங்கத்திக்கு படைக்கின்றனர்.

காணிக்கை காலம் முடிந்தவுடன் கோவில் நிர்வாகத்தால் நண்டுகள் சேகரிக்கப்பட்டு மீண்டும் தபி ஆற்றில் விடப்படுகின்றன.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...