நாங்களும் வந்துட்டோம்ல... பேஷன் டிரெண்டிங்கில் இணைந்த ராதாரவி

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் அசத்தியவர் நடிகர் ராதாரவி. அரசியல் ஈடுபாடு காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

சமீபத்தில், கலர்புல் கோட் சூட்டில் போட்டோ ஷூட் நடத்தி அசத்தியுள்ளார் இவர். கருப்பு நிற சட்டை, பிரவுன் நிற கோட்டு, பேன்ட், மேட்சிங்காக கூலிங் கிளாஸ், கலர்புல் கேசம் என போஸ் கொடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாகவே எங்கு சென்றாலும் வெள்ளை சட்டை, பேன்ட் சகிதமாக வலம் வருவார். இந்நிலையில், இந்த ஸ்டைலிஷான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


இந்த போட்டோ ஷூட்டுக்கு காரணம் இவருடைய பேத்தி பவித்ரா சதீஷ்; இதே சினிமா துறையில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இவர் பேஷன் டிசைனராக உள்ளார்.

விதவிதமான மாடர்ன் உடையில் நடிகர், நடிகைகள் சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவது தற்போது வாடிக்கையாக உள்ளது. ராதாரவியும் இந்த பட்டியலில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...