அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி மலை முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை வேத மந்திரங்கள் முழங்கிட மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தின் போது ராஜகோபுரம் மற்றும் தங்கவிமானங்களில் ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன.

இன்று காலை 8:30 மணிக்கு வேள்வி சாலையிலிருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்க தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர் தங்க விமான கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.


இதை தொடர்ந்து கோயிலில் உள்ள தெய்வங்களின் கோபுர சிலைகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.

முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரம் மின்னொலியில் ஜொலித்தது.

கும்பாபிஷேகத்துக்காக கடந்த 2 மாதங்களாக கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...