வறண்ட சருமத்தை மிருதுவாக்க கிளிசரின் ட்ரை பண்ணுங்க !
2 டீஸ்பூன் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் சிறிது கிளிசரினை கலந்து, காட்டனால் தொட்டு சருமத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி வர நாளடைவில் மிருதுவாக இருப்பதை உணரலாம்.
ஒரு டீஸ்பூன் தண்ணீரில் அரை டீஸ்பூன் கிளிசரின் கலந்த கலவையை பேஸ் பேக் தயாரிக்கும் போது சேர்க்கவும். இதனால், பேஸ் பேக் போடும் போது சருமம் முற்றிலும் வறண்டு போகாமல் தவிர்க்கலாம்.
இரண்டு டீஸ்பூன் கிளிசரினை சில துளிகள் தண்ணீரில் கலக்கவும். இதை உங்களின் பாடி லோஷன் பாட்டிலில் சேர்த்து, நன்றாகக் குலுக்கி வழக்கம் போல் பயன்படுத்தலாம்.
நீரேற்றத்துக்காக 'லிப் பாம்' ஜாடியில் சில துளிகள் கிளிசரின் சேர்க்கலாம். இதனால், மென்மையான, மிருதுவான உதடுகளை அழகாக பராமரிக்கலாம்.
1/2 கப் தேன், 1 டீஸ்பூன் கிளிசரின், 3 சொட்டு தண்ணீரை கலக்கி, பேஸ் மாஸ்க் ஆகவோ, சாதாரணமாகவோ சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவி வர நாளடைவில் மிருதுத்தன்மையை உணரலாம்.
1 கப் தண்ணீரில் 1 டே.ஸ்பூன் கிளிசரின் சேர்த்து, குளிக்கும் போது கடைசியாக சருமத்தில் பயன்படுத்தவும். பின்னர், குளிக்க வேறு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது. இதனால் சருமம் முழுக்க மிருதுத்தன்மை கிடைக்கக்கூடும்.