குடம் புளியின் பலன்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
குடம் புளியைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது தொடை மற்றும் தொப்பையை சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
இதன் இலை மற்றும் பழங்களில் கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இவை ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகை செய்கிறது.
குடம் புளியின் இலைகளை அரைத்து, உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி வந்தால் பொடுகு, அரிப்பு ஆகியவற்றைத் தடுத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
குடம் புளியில் பழச்சாறு, ரசம், சூப், ஊறுகாய், சட்னி ஆகியவை செய்து சாப்பிட்டு வர, நாளடைவில் பிசிஒஎஸ் காரணமாகப் பெண்கள் அனுபவிக்கும் மனஅழுத்தம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் குடம் புளியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து எடையை குறைக்கக்கூடும்.