ரூ.26,400-க்கு 6 நாள் அந்தமான் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி., வழங்குகிறது!

தீவு பிரதேசத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என எண்ணும் இந்தியர்களின் சாய்ஸ்களில் அந்தமான் முதலிடத்தில் இருக்கும். இங்கு செல்ல நினைப்பவர்களுக்கு பட்ஜெட் பேக்கேஜ் வழங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

அந்தமானை 6 நாட்கள் (5 இரவுகள்) சுற்றிக்காட்ட ரூ.23,665-ல் இருந்து கட்டணம் வசூலிக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி., இந்த குறைந்தபட்ச கட்டணம் 3 நபர்களுடன் ஒருவராக தங்குவதற்கு.

டபுள் ஆக்குபன்சி என்றால் ரூ.25,880. ஹனிமூன் ஜோடிகள் இதனை தேர்வு செய்யலாம். குழந்தைகளை அழைத்துச் செல்கிறீர்கள் எனில் அவர்களுக்கு படுக்கையுடன் ரூ.15,525.

படுக்கையில்லாமல் எனில் ரூ.12,210 வசூலிக்கின்றனர். போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு நாம் சொந்த சென்று இறங்கினால், அங்குள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்வார்கள்.

போர்ட் பிளேயரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகான, தென்னை மரங்கள் கடலுடன் கதை பேசும் கார்பைன்ஸ் கோவ் பீச் அழைத்துச் செல்வர். காலை, இரவு சிற்றுண்டி பேக்கேஜில் அடக்கம்.

பின்னர் வரலாற்று சிறப்புமிக்க செல்லுலார் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வர். அங்கு லைட் & சவுண்ட் ஷோ நடக்கும். போர்ட் பிளேயர் விடுதியில் இரவு தங்குவோம்.


2ம் நாள் காலை ராஸ் தீவு, வடக்கு விரிகுடா (நார்த் பே) தீவுக்கு சென்றால், ஏராளமான தண்ணீர் விளையாட்டுக்களில் பங்கேற்கலாம். அவற்றுக்கு நாம் தான் கட்டணம் செலுத்த வேண்டும்.

3ம் நாள் போர்ட் பிளேயரில் இருந்து சொகுசு படகில் ஹேவ்லாக் தீவுக்கு அழைத்துச் செல்வர். கடலில் அதிகாலை சூரிய உதயத்தை பார்த்த படி 54 கி.மீ, 2 மணி நேர ரம்மியமான பயணமாக அது இருக்கும்.

4ம் நாள் மதியம் அங்கிருந்து நீல் பீச்சுக்கு மற்றொரு சொகுசுப் படகில் பயணம். அங்கு லக்ஷ்மன் நகர் பீச்சில் சூரிய மறைவை தரிசிக்கலாம். அந்த ஒளி மிகவும் அழகாக இருக்கும்.

5ம் நாள் மாலை நமது சொந்த வேலைகளுக்கு ஒதுக்குவார்கள். பின் நீல் தீவில் இருந்து போர்ட் பிளேயரில் இறக்கிவிடுவார்கள்; விமானம் பிடித்து வீடு வந்து சேர வேண்டியது தான்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...