பாட்டிலில் இருந்து நம் பாக்கெட்டுக்கு வரும் கோகோ கோலா..!

ரியல்மி நிறுவனம், கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து விரைவில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடவுள்ளது.

பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, பல்வேறு சர்சைகளில் சிக்கி வந்தாலும் குளிர்பான சந்தையில், தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறது.

இந்த டீசர், ரியல்மி நிறுவனம் கோகோ கோலா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்பதை உணர்த்துகிறது.

முன்னதாக 2015ல் பெப்சி போன் ஒன்று ஸ்கூபி கம்யுனிகேஷன் எக்யுப்மெண்ட் உடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்பட்சத்தில் கோகோ கோலா பிரியர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் தோற்றத்தை பொறுத்தவரை, ரியல்மி 10 4ஜி போன்றே காட்சியளிக்கிறது.

கோகோ கோலா பிராண்டின் பிரதிபலிக்கும் விதமாக சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. அதுபோக எல்இடி ஃபிளாஷ், வளைந்த எட்ஜ்கள் உள்ளன.

தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களான ஃபேர்போன் மற்றும் ரேசர் போன்ற நிறுவனங்கள், இதில் வெற்றி கண்டுள்ளன.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...