நாவூறச் செய்யும் கோகோ கோலா சிக்கன்!
500 கிராம் சிக்கனை சுத்தம் செய்து தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டீஸ்பூன் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
மூன்று நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய 6 பல் பூண்டு, 1 டே.ஸ்பூன் இஞ்சி துருவல், நறுக்கிய 1 வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது ரெசிபியின் ஹீரோவான கோகோ கோலாவை 200 மில்லி லிட்டர் ஊற்றுங்கள்.
கோகோ கோலாவின் ஃப்ளேவர் முழுவதும் சிக்கனில் இறங்கும் வரை நன்றாக வதக்கவும். கடைசியாக சிறிதளவு வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி சிக்கன் மேல் தூவி விடுங்கள்.
இப்போது டார்க் பிரவுன் நிறத்தில் ஜூசியான, சாஃப்ட் கோகோ கோலா சிக்கன் ரெடி.