நம்பிக்கை தரும் இந்திய ஸ்டார்ட் அப் தொழில்கள்..!
இந்தாண்டு, நேரடி வாடிக்கையாளர் சேவை மற்றும் எலெக்ட்ரிக் வாகன சந்தை , உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்குறைப்பால், ஸ்டார்ட் அப்கள், அறிவார்ந்த நபர்களை அணுகுவது அதிகரித்து வருகிறதென, இந்தியாவின் முதல் வென்சர் நிதி நிறுவனமான 100எக்ஸ்.விசி தெரிவித்துள்ளது.
சரியான ஸ்டார்ட் அப்களை, தேர்வு செய்து இந்தாண்டு முதலீடு செய்வோர்க்கு, 2030க்குள் தங்களது போர்ட்ஃபோலியோ ஒளிமயமானதாக மாறும்.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 2022ல் 24.7 பில்லியன் டாலராக 35% முதலீடு குறைந்துள்ளது.
க்யூ.எஸ்.ஆர் எனப்படும் உணவு சார்ந்த வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருவதால், முதலீடுகளை ஈர்ப்பத்தில் பெரும்பாலான துறைகளை விஞ்சுகிறது.
இந்தியாவின் மின்னணு வர்த்தகம், 2026ல் 200 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகன சந்தை, 2030குள் 10 மில்லியன் நேரடி வேலைகளையும், 50 மில்லியன் மறைமுக வேலைகளையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.