தண்ணீர் தொட்டிகள் பலவிதம்... அத்தனையும் புதுவிதம்!

பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உப்லான் என்ற கிராமத்தில் தண்ணீர் தொட்டிகளை சாதாரணமானது போல் இல்லாமல் பல்வேறு டிசைன்களில் விதவிதமாக வைத்துள்ளனர்.

உப்லான் கிராமத்தைச் சேர்ந்த தர்செம் சிங் என்பவர் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் சென்றபோது ஒரு கப்பலில் பயணம் செய்துள்ளார்.

ஒருமுறை தனது மகன்களுடன் தனது கடந்த காலத்தைப் பற்றி விவாதித்தபோது, ​​​​அவர் பயணம் செய்த கப்பலைபோல் வீட்டின் கூரையில் ஒரு கப்பலை உருவாக்க முடிவு செய்தார்.


1995ல் தொட்டியை கப்பல் வடிவத்தில் உருவாக்கினார். அதன் பின்னர் இந்த கப்பல் தொட்டி வீட்டிற்கும் குடும்பத்திற்கும் அடையாளமாக மாறியது.

அதை தொடர்ந்து இந்த ஊர் மக்கள் தங்களுக்கு பிடித்த அல்லது தங்களுக்கு தொடர்புடைய வடிவத்தில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க தொடங்கினார்கள்.


இங்குள்ள அனைத்து வீடுகளும் அவர்கள் வைத்திருக்கும் வித்தியாசமான தண்ணீர் தொட்டிகளை வைத்து அடையாளம் காணப்பட ஆரம்பித்தது.

காலம் எவ்வளவு மாறினாலும், எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் இங்கு வசிக்கும் பஞ்சாபி மக்கள் தனித்துவமாக செய்யப்பட்ட இந்த தண்ணீர்தொட்டிகளையே நிறுவ விரும்புகின்றனர்.

கப்பல், விமானம், குதிரை, ராணுவ வீரர், மயில், சிங்கம், புலி, கழுகு, விவசாயி, கால்பந்து, குக்கர், மாருதி 800 என அனைத்துவிதமான தண்ணீர் தொட்டிகளை இந்த கிராமத்தில் பார்க்கலாம்.


இந்த தண்ணீர் தொட்டிகள் வீட்டின் உரிமையாளரின் மனநிலையையும், ரசனையையும் பிரதிபலிக்கின்றன.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...