சாகுந்தலம் படத்துக்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா!

கதையின் நாயகியாக சமந்தா நடித்து வெளியான யசோதா படம் வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 17ஆம் தேதி மீண்டும் இன்னொரு படமான சாகுந்தலம் திரைக்கு வருகிறது.

புராணக்கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றது. சமந்தாவுடன் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் உயர் ரக கற்கள் பதிக்கப்பட்ட 30 கிலோ எடை கொண்ட ஒரு புடவையை அணிந்து ஒரு வார காலம் சமந்தா நடித்திருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


அதேபோன்று 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்தும் இந்த படத்தில் சமந்தா நடித்துள்ளாராம்.

அப்படி தங்க, வைர நகைகள் அணிந்து புராண கால கெட்டப்பில் சமந்தா நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...