பங்குச்சந்தையில் ஆவரேஜிங் டவுன் செய்வது என்றால் என்ன? எப்போது அதைப் பயன்படுத்த வேண்டும்.
பங்கு ஒன்றினை முன்பு ஒரு விலையில் வாங்கிவிட்டு, பின்னர் அதே பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும் போது வாங்கிச் சேர்ப்பது ஆவரேஜிங் டவுன்.
உதாரணத்திற்கு ஆக்சிஸ் வங்கியின் 100 பங்குகளை ரூ.700-க்கு (700*100 = 70,000) வாங்குகிறீர்கள். அது ரூ.650 ஆக சரிகிறது.
அப்போது மீண்டும் 100 பங்குகளை வாங்குகிறீர்கள் எனில், உங்களிடம் இருக்கும் ஒரு பங்கின் ஆவரேஜ் விலை ரூ.675.
நல்ல நிலையில் உள்ள நிறுவனத்தின் பங்குகள் திடீரென கிளம்பிய ஏதேனும் செய்தியால் வீழ்கிறது என தெரியும் போது கூடுதல் பங்குகளை வாங்கலாம்.
நீண்டகாலத்திற்கு ஏற்ற பங்கு என தெரியவந்தால், விலை குறைய குறைய கணிசமாக வாங்கிச் சேர்க்கலாம்.
ஆவரேஜ் செய்யப்பட்ட பங்கு விலை மேலும் சரிந்தால் நஷ்டம் மேலும் அதிகரிக்கவும் செய்யும் என்பதை நினைவில் கொள்க.
அண்டர்வேல்யூ என தெரியும் பங்குகளில் மட்டும் நீண்டகால நோக்கில் இதனைச் செய்யலாம்.