மறந்தும் இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க

கீரையை ஒருமுறை சமைத்து மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால் இதிலிருக்கும் நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். இது செரிமான பிரச்னை மற்றும் குடல் புற்றுநோய் உண்டாக வழிவகை செய்யும்.

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகம் உள்ளது. எனவே சமைத்த பீட்ரூட்டை மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால்,புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் அதிகமுள்ளது.


சிக்கனை சூடுபடுத்திச் சாப்பிடும் போது, அதன் சத்துகள் அதிகரித்து புட் பாய்சனாக வாய்ப்புள்ளது. எனவே மறந்தும் மீண்டும் சூடு செய்து சாப்பிடக் கூடாத உணவுகளில் சிக்கனும் ஒன்றாக உள்ளது.


முட்டையில் அதிக புரதச்சத்துள்ளதால் மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால் செரிமான கோளாறு மற்றும் வயிறு கோளாறுகளை உண்டு பண்ணலாம்.


ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, இதய நோய், உணவு குழாய் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...