பேரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பச்சை ஆப்பிள் போலக் காட்சியளிக்கும் பேரிக்காய் குழந்தைகள் துவங்கி பெரியோர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற ஓர் காய் வகை. இதன் ஆரோக்கியப் பலன்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?

இதய படபடப்பு உள்ளவர்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைத் கட்டுப்படுத்தும் பேரிக்காயை தினமும் சாப்பிடலாம்.


ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களின் எலும்புகளும், பற்களும் வலுப்பெற பேரிக்காய் துணை புரிகிறது.


கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள் பேரிக்காய் சாப்பிட்டால் பால் அதிகளவில் சுரக்கும்.

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் காலை பேரிக்காய் சாப்பிட்டால் மலம் எளிதாக வெளியேறும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது.



Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...