வேளாண் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க நிதி: பிரிட்டன் நிறுவனம் பாராட்டு

இந்த மத்திய பட்ஜெட்டில், கிராமப்புறங்களில் விவசாய ஸ்டார்ட்அப் தொடங்கப்படுவதற்கு நிதி அமைக்கப்படும், என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதனை ஊக்குவிப்பதன் மூலம், கடன் இலக்கை ரூ.2 லட்சம் கோடியாக்க, உதவும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான குளோபல் டேட்டா தெரிவித்துள்ளது.


விவசாயத் துறை வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருப்பதால் பட்ஜெட்டில் தேவையானதைப் பெற்றுள்ளது.

குளோபல் டேட்டா மதிப்பீட்டின்படி, 2023 - 25ல் இந்தியாவின் விவசாயம் மற்றும் அது தொடர்புடைய துறைகளின் மொத்த மதிப்பு கூட்டல் அளவானது 10.2% உயரக்கூடும்.


இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்களில் மட்டுமே இன்னும் எந்த ஒரு நிறுவனமும் நூறு கோடி டாலர் சந்தை மதிப்பான யூனிகார்ன் அந்தஸ்தை பெறாமல் உள்ளது.

தற்போது, விவசாயத்தை நிலையானதாக மாற்ற அத்துறையில் அரசின் கவனம் திரும்பியுள்ளது.

ஹெசா வேளாண் நிதி ஸ்டார்ட்அப்பின் நிறுவனறான வம்சி உதயகிரி, “நவீன தொழில்நுட்பங்களுடன், மலிவான தீர்வுகளை கொண்டு வருவதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...