சுவையான ஹரியாலி சிக்கன் ஃபிரை செய்யலாம் வாங்க...!

புதினா, கொத்தமல்லி இலை தலா 1 கைப்பிடி, தயிர் - 100 கிராம் மற்றும் பச்சை மிளகாய் - 4 ஆகியவற்றை மிக்சி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

1 கிலோ சிக்கனில் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கார்ன்பிளார் மாவு தலா 2 டே.ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டே.ஸ்பூன், உப்பு, சீரகத்தூள் மற்றும் தனியா தூள் தலா 1/2 டேபிள் ஸ்பூன்...

கரம் மசாலா, மஞ்சள் தூள் தலா - 1/4 டே.ஸ்பூன், அரைத்து வைத்த கொத்தமல்லி இலை, புதினா கலவையை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் 1/2 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தியை (கசூரி மேத்தி) ஓரிரு நிமிடத்துக்கு நன்றாக வதக்கவும். பின், கைகளால் அழுத்தி பவுடராக்கி ஊறிய சிக்கன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை போட்டு பொறித்தெடுக்கவும். இப்போது சுவையான கலர்புல்லான ஹரியாலி சிக்கன் ஃபிரை ரெடி.


கொத்தமல்லி, புதினாவை அரைத்து சேர்த்திருந்தாலும் குறைந்தளவில் தான் பச்சை நிறமாக இருக்கக்கூடும். கூடுதல் பச்சை நிறமாக இருக்க ஃபுட் கலரை சேர்க்கலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...