பூமியின் மையப்பகுதி சுழற்சி; விஞ்ஞானிகளுக்கிடையே தொடரும் விவாதம்..!
பூமியின் மையப்பகுதி 70 ஆண்டுகள் கழித்து எதிர் திசையில் சுழலத் துவங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியின் மேற்பரப்புப் பகுதியான கிரஸ்டில் தான் நாம் வசிக்கிறோம்.
மேற்பரப்பிற்கும் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட குளிர்ந்த பாறைகளினால் ஆன திடப்பகுதி மேண்டில் எனப்படுகிறது.
பூமியின் உள் மையப்பகுதியான கோர், இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருண்டையான வடிவில் காணப்படுகிறது.
இதன் வெப்பநிலை, கிட்டதட்ட சூரியனுக்கு நிகராக 5700 டிகிரி.
எனவே, இந்த மையப்பகுதி எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்வதில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
பூமியின் உள் மையப்பகுதி, தற்போது சுற்றுவதை நிறுத்தி விட்டதாகவும் விஞ்ஞானிகள் இடையே கருத்து நிலவுகிறது.
இதற்கு அடுத்து 2040-ஆம் ஆண்டு மீண்டும் தனது சுற்று திசையை மாற்றிக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.