கல்லீரலை சுத்தப்படுத்தும் இயற்கையான ஐந்து உணவுகள்.


திராட்சைப்பழம் குடல் நன்றாகச் செயல்பட உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. திராட்சையில் உள்ள 'நரின்ஜெனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் கல்லீரல் கொழுப்பை நீக்கிறது.

பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான அளவு நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, நச்சுக் கழிவுகள் விரைவாக உடலில்லிருந்து வெளியேறுகின்றன.

பூண்டில் உள்ள அலிசின், வைட்டமின் சி மற்றும் பி6, செலினியம் ஆகிய சத்துக்கள் நச்சு நீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், க்ளுடோதயோன், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் வால்நட்டில் உள்ளன. இது கல்லீரலின் என்சைம்களை தூண்டி உணவு செரிமானமாக உதவுகிறது.

முட்டைகோஸ் கல்லீரலை நச்சுக்களிலிருந்து பாதுகாக்கும் வேலையை செய்கிறது. இதில் அதிக அளவு சல்பர் இருப்பதால், கல்லீரலில் உள்ள என்சைம்களை சுரக்க ஊக்குவிக்கிறது. இதனால் கல்லீரலுக்குள் செல்லும் ஆபத்து நிறைந்த நச்சுக்கள் வெளியேறும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...