புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்.
ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் புற்று நோய்க்கு பலியாகின்றனர். ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்று நோயினால் இகழ்வதாக உலகம் சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
2008-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 4 'உலக புற்றுநோய் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
பல்வேறு விதமான புற்று நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறினாலோ, வேறு காரணிகளால் ஏற்படும் மாற்றங்களாலோ மிகைப்பெருக்கத்திற்கு உள்ளாகி, புற்றுநோய் செல்களாக மாறுகின்றன.
புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்திடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
புற்றுநோயினை கண்டிட உதவும் 'பாப் ஸ்மியர்' (Pap smear) பரிசோதனையை மூன்று வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேல், மார்பக புற்றுநோயை கண்டிட உதவும் 'மேமோகிராம்' பரிசோதனையை 1-2 வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.