இமயத்தின் மடியில் இளைப்பாறும் பாங்காங்!

இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில் இந்திய- திபெத் எல்லைப் பகுதியில் பாங்காங் ஏரி அமைந்துள்ளது.


பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீ., உயரத்தில் உள்ளது. சுமார் 134 கி.மீ., நீளமும் 5 கி.மீ., அகலமும் கொண்டு பரந்து விரிந்து காணப்படுகிறது.

மலைகளுக்கு இடையே கண்களைக் கொள்ளைக் கொள்ளும் அழகான ஏரி, அதன் பின்னால் பனியால் மூடப்பட்ட மலைகள் என எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நமது கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் மாற்றம் இல்லை.

இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருகிலுள்ள, பசுமைப் பள்ளத்தாக்கு மற்றும் திக்சே கிராமத்தை கண்டு இன்புறலாம்.

பறவை ஆர்வலர்கள் இந்த ஏரியை சுற்றிப்பார்த்து, இந்த பகுதியில் வாழும் பறவைகளான பார் தலையுடைய வாத்துக்கள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி, ஆகியவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

குறிப்பாக பாங்காங் ஏரி உப்பு தண்ணீர் ஏரியாக இருந்தாலும், குளிர்காலங்களில் இதிலுள்ள தண்ணீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துவிடும்.

பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு பாங்காங் ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதியில்லை.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...