அத்தியாவசிய இரைப்பை சாறுகளை இது நீர்த்துப்போக செய்து, செரிமானத்தை தாமதப்படுத்தும். இன்சுலின் அளவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால், நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும்
சாப்பிட்டதும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொண்டவர்களுக்கு நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கான வாய்ப்பு அதிகம் என கூறுகின்றனர்
உணவு சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன், சாப்பிட்ட 20 நிமிடங்களுக்கு பின் தண்ணீர் பருகுவதே சிறந்தது என்கின்றனர் டயட்டீஷியன்கள்
அதற்காக மறந்து தண்ணீரே குடிக்காமல் இருந்துவிடாதீர்கள். ஒரு பாட்டிலில் ஊற்றி பக்கத்தில் வைத்துக்கொண்டால் மறக்காது.
கோடைக்காலம் நெருங்கிவிட்டது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க நாள் முழுவதும் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்திக்கொண்டே இருங்கள்