பச்சைப்பயறு போதுமே.. CWC ஸ்ருத்திகாவின் ரகசியம்...!

மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருத்திகா 2002ம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே போன்ற பல படங்களிலும் நடித்தார்.

அர்ஜூன் என்பவரை காதல் திருமணம் செய்து செட்டிலான இவர், சில மாதங்களுக்கு முன், தனியார் 'டிவி' சானலின் சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்; டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.

தன் துரு துரு பார்வை, குறும்புத்தனமான செயலால் மீண்டும் ஒரு ரவுண்டு வருமளவுக்கு அனைவரின் பார்வையையும் தன்பக்கம் கட்டிப்போட்டுள்ளார்.

'பச்சைப்பயிறை பவுடராக அரைத்து வைத்துக்கொள்வேன். தினமும் குளிக்கும்போது இரண்டு டீஸ்பூன் பச்சைப்பயறு பவுடரை தண்ணீருடன் கலந்து பேஸ் மாஸ்க் ஆக பயன்படுத்துவேன்.

முகத்துக்கு குளியல் சோப் பயன்படுத்தமாட்டேன். எப்போதும் இந்த பவுடரை மட்டுமே பயன்படுத்துவேன்.

இதனால் எனது சருமம் மிகவும் பளபளப்பாக உள்ளது. எண்ணெய் பசை, வறட்சி போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்பட்டுள்ளன' என சருமப்பராமரிப்பு குறித்து ஒரு பேட்டியில் ஸ்ருத்திகா கூறியுள்ளார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்