முளைக்கட்டிய பயறுகளில் நன்மைகள் தாராளம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விதவிதமான உணவுகளை பலரும் எடுக்கின்றனர். அதில் முளைக்கட்டிய பயறுகளுக்கு முக்கிய இடம் உள்ளது.
ஊட்டச்சத்துக்களும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவாக முளைக்கட்டிய தானியங்கள் உள்ளது.
இவற்றிலுள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மை கொண்ட என்சைம்ஸ், அதிகளவில் உள்ளது.
பொட்டாசியச் சத்து உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட நீரிழிவு பிரச்னைக் கட்டுப்பாட்டில் இருக்கும்; உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
முளை விட்ட கோதுமை புற்று நோய் தாக்கத்தை குறைக்கும். முளை விட்ட எள், வேர்க்கடலை சாப்பிட உடல் எடை அதிகரிக்கும்; ஆரோக்கியம் மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை சாப்பிட உடல் வலிமை அதிகரிக்கிறது. முளை விட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
முளை விட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் எடையை குறைப்பதுடன், மூட்டு வலி நீங்க உதவுகிறது.
முளைவிட்ட பயறுகள் ஆரோக்கியமான சூழலில் வளரவேண்டும். முளைவிட்ட பயறுகளின் நிறம் சிறிது மாறியிருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ அவற்றை தவிர்க்க வேண்டும்.