உடலுக்கு பலம் தரும் பலாப்பழத்தின் நன்மைகள்!
தமிழர்கள் கொண்டாடும் முக்கனிகளில் ஒன்றாக, தனி சிறப்பு கொண்டது பலா.
பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ,பி,சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி,ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பலாக்கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடல் செல்களில் உள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வராமல் காக்கும்.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரிசெய்கிறது.
பலா, குடல்களில் ஏற்படும் நோய்களைக் போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
இதிலுள்ள கார்போஹைர்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது.
இதிலுள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்னைகளை குணப்படுத்தும்.