கொஞ்சம் அசால்டாக இருந்தாலும் ஆபத்தை தரும் இந்த உணவுப்பொருட்கள் !

உணவு என்பது வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் நன்மையை மட்டுமே அளிப்பதில்லை.

உடலுக்கு தீங்கு அளிக்கக்கூடிய நஞ்சுத் தன்மைகள் ஒரு சில உணவுகளில் உள்ளன.

பலருக்கும் பிடித்தமான பட்டியலில் உள்ள உருளைக்கிழங்கு கூட ஆபத்தை விளைவிக்கிறது.

உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைகள் உள்ளன.

உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால் அதில், கிளைகோல்கலாய்டு எனும் நஞ்சு நிறைந்திருக்கும். இது ஆபத்தானது.

கிச்சனில் தினசரி பயன்பாட்டில் தக்காளி முக்கிய அங்கமாக உள்ளது. தக்காளி இல்லாவிட்டால் சமையலே சிறக்காது.

தக்காளியின் தண்டு மற்றும் இலைகளில் உள்ள கிளைகோல்கலாய்டு என்ற விஷம், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பது பலருக்கும் தெரியாது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

ஆப்பிள் விதைகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

ஆப்பிள் விதைகளில் சயனைடை உருவாக்கும் அமிக்டலின் என்ற கலவை உள்ளது.

சைவ உணவுகளின் விருப்பப்பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை காளான்; பலருக்கும் பிடித்தமானது.

ஒருசில காளான்களில் (வெப்கேப்கள், கோனோசைப் ஃபிலாரிஸ் ) இயற்கையாகவே நச்சுத்தன்மைகள் நிறைந்துள்ளன.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...