கேன்ஸ் 2023... சிவப்புக் கம்பளத்தில் அசத்திய அதிதி ராவ் ஹைதாரி
பிரான்ஸில் 76வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடக்கிறது.
நேற்று இந்த விழாவில், சிவப்பு கம்பளத்தின் மீது அதிதி ராவ் ஹைதாரி முதன்முதலில் தோன்றினார்.
L'Ete Dernier (கடந்த கோடைக்காலம்) படம் திரையிடப்பட்டபோது, ஜொலிக்கும் பிரகாசமான மஞ்சள் நிற ஃபுல் ஸ்ட்ராப்லெஸ் ரஃஃபிள் கவுனில் சிவப்பு கம்பளத்தில் நடை போட்டார் அதிதி.
பிரபல பேஷன் டிசைனர் மைக்கேல் சின்கோ இந்த உடையை வடிவமைத்துள்ளார்.
காதுகளில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தோடுகள், அழகிய மோதிரம் மட்டும் அணிந்த நிலையில், விரித்த கூந்தல், அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் என மினிமல் லுக்கில் மாடர்ன் இளவரசியை போன்று அசத்தினார் அதிதி.
தன் இன்ஸ்டா பக்கத்தில் கேன்ஸில் பங்கேற்ற புகைப்படங்களை பதிவிட்ட அதிதி, 'முழு மலர்ச்சி' எனக் குறிப்பிட்டுள்ளார்.