கேன்ஸ் விழாவில் அசத்திய அனுஷ்கா சர்மா

உலகளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கோலாகலமாக நடக்கிறது.

ஏற்கனவே, ஐஸ்வர்யா ராய் பச்சன், மிருணாள் தாக்கூர் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி உட்பட பலரும் சிவப்புக் கம்பளத்தில் நடை போட்ட நிலையில், அனுஷ்கா சர்மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

நேற்றிரவு பெரியளவிலான ரோஜா பூக்கள் வடிவிலான ஸ்ட்ராப்லெஸ் பிளவுஸ் இணைந்துள்ள ஐவேரி நிற பாடிகான் ஃபுல் கவுனில் உற்சாக நடைப்போட்டார்.

ரிச்சர்ட் க்வின் கோச்சர் பிராண்டின் இந்த ஐவேரி நிற கவுனில் கை வேலைப்பாடுகளுடன் கூடிய எம்பிராய்டரி மற்றும் டஃபெட்டா ரோஜாக்கள் அலங்கரிக்கின்றன.

இறுக வாரிய கூந்தலில் தூக்கி இடப்பட்ட கொண்டை, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் வைரத்தோடுகள், ஸ்டைலிஷான வைர மோதிரங்கள் என மினிமல் மேக்கப்பில் ஜொலித்தார் அனுஷ்கா.

தொடர்ந்து, பிராடா பிராண்டின் இளம் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் டாப் மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்து ஸ்டைலிஷாக மாடர்ன் லுக்கில் அசத்தினார் அனுஷ்கா சர்மா.

இந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட நிலையில் 'தி நைட்' என பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...