அஞ்சாத சென்னைக்கு அஞ்சாவது கோப்பை

ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடந்தது. 'நான்கு முறை சாம்பியன்' சென்னை அணி, 'நடப்பு சாம்பியன்' குஜராத்தை எதிர்கொண்டது.

குஜராத் அணிக்கு சுப்மன் கில், சகா வலுவான துவக்கம் தந்தனர். துஷார் தேஷ்பாண்டே பந்தை சுப்மன் வேகமாக அடித்தார். சகார் ஓவரில் சகா ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 16 ரன் கிடைத்தன.

தொடர்ந்து அசத்திய சுப்மன் கில், தீக் ஷனா ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, முதல் 6 ஓவரில்(பவர் பிளே) குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன் எடுத்தது.

ஜடேஜா வீசிய 7வது ஓவரின் 2வது பந்தில் சுப்மன் 'ரன் அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பினார். இதே ஓவரின் கடைசி பந்தில் தோனியின் மின்னல் வேக 'ஸ்டம்பிங்கில்' சுப்மன்(39) அவுட்டாக, திருப்பம் ஏற்பட்டது.

பதிரனா வீசியா கடைசி ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய சுதர்ஷன், 96 ரன்னுக்கு(47 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

ரஷித் கான்(0) ஏமாற்றினார். குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 214 ரன் எடுத்தது. பாண்ட்யா(21) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் பதிரானா அதிபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கை விரட்டிய சென்னை அணி 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது.மழை ஓய்ந்ததும், 15 ஓவரில் 171 ரன் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது.

ஏழாவது ஓவரை வீசிய ஆப்கானிஸ்தானின் 18 வயது நுார் அகமது, சென்னைக்கு இரட்டை 'ஷாக்' கொடுத்தார். ருதுராஜ்(26), கான்வேயை(47) அவுட்டாக்கினார்.

தனது கடைசி போட்டியில் பங்கேற்கும் அம்பதி ராயுடு தன்பங்கிற்கு மோகித் சர்மா ஓவரில் இரு சிக்சர், பவுண்டரி பறக்கவிட்டார்.

இதே ஓவரின் 4வது பந்தில் ராயுடு(19) அவுட்டானார். 5வது பந்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த 'தல' தோனி (0) நடையை கட்ட சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடைசி இரு பந்தில் 10 ரன் தேவை. 5வது பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க, 'டென்ஷன்' எகிறியது. 6வது பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா, சென்னை அணியின் கோப்பை கனவை நனவாக்கினார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...