மோரில் கறிவேப்பிலை சேர்த்துப் பாருங்க...உடல் புத்துணர்ச்சி பெறும்..!

மோர் அருந்தினாலும் சரி, ரசம் சாதம் சாப்பிட்டாலும் சரி, எப்படியும் கறிவேப்பிலையை நாம் ஒதுக்கி வைக்கத்தானே போகிறோம்.

கறிவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு சீராகி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

கறிவேப்பிலை செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

கறிவேப்பிலை இளநரையை தடுக்கிறது. முடி உதிர்தலையும் தடுக்கிறது. மெலிந்த கூந்தலுக்கு வலிமை சேர்க்கிறது.

ப்ராஸ்டேட், பெருங்குடல் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புகள் இதில் அதிகமாக உள்ளதால் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

இரும்பு சத்து, போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் பங்கு மிக முக்கியமானது.

ரத்த சோகையை போக்க உதவுகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...