பெண்கள் விரும்பும் கேப் கவுன்கள்...
போட் நெக் கேப் கவுன்களில், நெக் ஓவல் வடிவத்தில் இருக்கும். கழுத்து நீளமாக உள்ளவர்களுக்கு இந்த கவுன்கள் கச்சிதமாக பொருந்தும்.
ஒன்சைடு ஸ்லீவ் கேப் கவுன்கள், பார்ட்டிகளுக்கு மிகப் பொருத்தமானவையாக இருக்கும். இந்த கவுன், ஒரு கையை தவிர்த்து உடலை முழுவதுமாக கவர் செய்து கொள்கிறது.
டபுள் லேயர் கேப் கவுன், போட் நெக் டிசைனில் இருக்கும். ஆனால், இதில் இரண்டு அடுக்குகளில் கேப் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இது லாங் மற்றும் சார்ட் கேப்களில் இருக்கின்றன.
அன்பாரலல்ட் கேப் கவுன், சமமான அளவில் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இது முன்புறம் ஏற்றத்துடனும், பின்புறம் இறக்கத்துடனும் இருக்கும்.
டிசைனர் கேப்களை பொருத்தவரையில், கவுன்களுக்கு ஏற்ப நெட், எம்பிராய்டரி அல்லது கிறிஸ்டல் டிசைன்கள் இருக்கும். மேலும், மணிகளால் மட்டுமே கேப்கள் தயாரிக்கப்படுகின்றன.