சிக்கல் தரும் சிக்கு!
பெண்கள் தினம் தினம் சந்திக்கும் சிக்கல்களில் மிகவும் சிரமமாக இருப்பது கூந்தலில் ஏற்படும் சிக்குகள் தான்.

கூந்தல் வளர்ச்சிக்கான பராமரிப்பில் மிக முக்கியமானது, காலையும் மாலையும் சிக்கை நீக்கி சீவி பின்னலிடுவது தான்.

வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால், தலையில் அழுக்கு சேராது. இதனால் சிக்கு வருவதும் குறையும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூந்தலின் நுனியை வெட்டி விடுவதன் மூலம் சிக்கை தவிர்க்கலாம். கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

தலைக்கு குளித்த பின் கூந்தலை நன்கு உலர்த்தவும், கூந்தல் உலர்ந்த பின்னர் சிகை அலங்காரம் செய்யவும்

சிக்கு எடுக்க நல்ல இடைவெளியுள்ள சீப்புகளைப் பயன்படுத்தவும்.

எந்த விதமான வித்தியாசமான ஹேர் ஸ்டைல் செய்தாலும் தூங்கும் முன் பொறுமையாக சிக்கை நீக்கவும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்