மிரட்டும் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்...

தண்ணீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும்.


ஸ்டோர்ரூம்கள், மாடி படி இடுக்குகளில் கொசுகள் காணப்படும், அவ்வப்போது அந்த பகுதிகளை சுத்தம் செய்ய மறவாதீர்.

சூரியன் மறையும் போது, கதவு ஜன்னல்களை மூடுங்கள். இல்லை என்றால் கதவு, ஜன்னல்களுக்கு கொசு வலைகளை இணைத்துவிடுங்கள்.

சாமந்தி, துளசி, லெமன்கிராஸ், சிட்ரோனெல்லா, புதினா மற்றும் லெமன் பாம் போன்ற செடி வகைகள் கொசுவை விரட்டும் தன்மைக் கொண்டது.

கிராம்பு மற்றும் சிட்ரஸ் வாசனை கொசுக்களை வெளியேற்ற உதவும். எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, கிராம்புகளை இரண்டு பகுதிகளில் இடையிடையே வையுங்கள்.


கொசு இல்லாத வீட்டிற்கு பூண்டு ஸ்ப்ரே நல்ல சாய்ஸ். பூண்டை தண்ணீரில் கொதிக்க வைத்து, நீரை வடிக்கட்டி, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டை சுற்றி தெளிக்கவும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்