5 ஜி அலைக்கற்றை.. அறிந்ததும் அறியாததும்...!

சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தை, மத்திய தொலைதொடர்பு ஆணையம் (டிராய்) நடத்தி முடித்துள்ளது. ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் சென்றுள்ளது.

72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை, 20 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி கொள்ள ஏலம் நடந்தது.

ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனம் பங்கேற்றன. அதிகபட்சமாக பாதிக்கும் மேற்பட்ட ஸ்பெக்ட்ரமை கைப்பற்றியுள்ள ரிலையன்ஸ் ஜியோ ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

பார்தி ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ரூ.18,799 கோடிக்கும், அதானி ரூ.220 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை ஏலம் எடுத்துள்ளன.

தற்போது பயன்பாட்டில் உள்ள 4 ஜி இணைய வேகத்தை விட 10 மடங்கு அதிவேகமாக 5 ஜி சேவையில், தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்

4 ஜி அலைக்கற்றையை ஒப்பிடுகையில், ஒரு மீட்டர் தொலைவிற்குள் கூடுதலாக 1,000 சாதனங்களை இணைக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட வீடியோவை டவுன்லோடு செய்ய 2 ஜி சேவையில் 2.8 நாட்களும், 3 ஜி சேவையில் 2 மணி நேரமும், 4ஜி சேவையில் 40 நிமிடமும் எடுக்கும். 5 ஜி சேவையில் அது 35 நொடிகளுக்குள் முடிந்து விடும்.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 7 சதவீதம் பேர் மட்டும் 5 ஜி ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.

இந்தியாவில் முதல் நிறுவனமாக, ஆகஸ்ட் இறுதியில் 5 ஜி சேவையை துவங்க இருப்பதாக பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது.

மும்பை, பெங்களூரு, சென்னை, புனே போன்ற மெட்ரோ நகரங்களில் 5ஜி இணையச்சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...