டோர்ன்டு ஜீன்ஸில் கலக்கும் ஆலியா பட்

நவநாகரிக உலகில் 'டிசாஸ்டர், டிஸ்ட்ரஸ்டு மற்றும் டோர்ன் ஜீன்ஸ்' என்ற ஆங்காங்கு கிழிந்த ஜீன்ஸை அணிபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.


இதை அணியாத கோலிவுட், பாலிவுட் பிரபலங்களே இல்லை எனலாம். இதற்கேற்ப பேஷன் உலகில் விதவிதமாக கிழிந்த ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன.

நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ஆலியா பட், நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலரும் இதை அணிந்து உலா வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் கிழிந்த ஜீன்ஸை அணிந்தவாறு கியூட்டான போஸில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


இவர் அணிந்துள்ள ஜீன்ஸ் கிழிந்தாற்போல் இருப்பது மட்டுமின்றி ஆங்காங்கே நூல்கள் கொத்தாக தொங்குவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப அணிந்துள்ள வெள்ளை நிற காலர் பட்டன் சட்டை ஸ்டைலிஷான மற்றும் ரிச் லுக்கைத் தருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர்.

டிரெண்டிங்காக மட்டுமின்றி இவரின் பேவரைட் உடையாகவும் இது இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ஆலியாபட் வெளியிடங்களுக்கு செல்லும் போதும் இந்த கிழிந்த ஜீன்ஸ் உடைகளையே அவ்வப்போது அணிவது குறிப்பிடத்தக்கது.


ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையிலும், உடைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...