உடல் எடையை குறைக்க உதவும் ஆளி விதைகள்

பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக் கூடியது ஆளி விதைகள். ஊறவைத்தோ, அல்லது அரைத்துப் பொடியாகவோ இதை சாப்பிடலாம்.

இதில், புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதை தொடர்ந்து பயன்படுத்த மார்பக புற்றுநோய், இதய நோய் போன்றவைக்கு தீர்வாக உள்ளது. தைராய்டு பிரச்னையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


இதில், நார்ச்சத்து அதிகமுள்ளதால் பசி உணர்வைக் குறைக்கிறது. உடலில் தேவையற்றக் கெட்டக் கொழுப்புகளை கரைப்பதால் உடல் எடை குறைப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.


உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டே.ஸ்பூன் ஆளி விதை பவுடரை கலக்கி குடிக்கவும். ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை சாப்பிடலாம்.

ஒரு பவுலில் யோகர்ட் அல்லது தயிர் மற்றும் ஆளி விதை பவுடர் தலா 2 டே.ஸ்பூன் உடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி சாப்பிடலாம்.

உங்களுக்கு பிடித்தமான ஸ்மூத்தியில் 1 டே.ஸ்பூன் ஆளிவிதைகளையும் சேர்த்து அரைக்கலாம். இல்லாவிட்டால் ஸ்மூத்தி, பழ சாலட்டுடன் 1 டே.ஸ்பூன் ஆளி விதை பவுடரையும் சேர்த்து சாப்பிடலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...