பளபளப்பான சருமத்துக்கு...!

பார்லர்களில் ஆயிரக்கணக்கில் செலவழித்துதான் பிரபலங்கள் பளபளப்பான சருமத்துடன் உள்ளனர் என நினைப்பவர் உண்டு.பலரும் பிரபலங்கள் என்பதையும் தாண்டி பச்சைப்பயறு, மஞ்சள், தேங்காய் எண்ணெய் போன்ற பாட்டி கால பாரம்பரிய பொருட்களையும் முறைகளையும் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
சாதாரண நாட்களில் காஜல், ஐலைனர் மற்றும் சன்ஸ்கிரீனை மட்டுமே பயன்படுத்துவதால் மேக்கப் இல்லாத நாட்களிலும் அவர்களின் சருமம் அழகாக ஜொலிக்கிறது.

அந்தந்த இடத்துக்கேற்ப பருவகாலத்தைப் பொறுத்து சருமத்தை பராமரிக்கும் பழக்கத்தை பின்பற்றவும். தினமும் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் போன்றவற்றை தவறாமல் செய்யவும்.

சருமத்தில் ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக தோல் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.

நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். தினமும் குறைந்தபட்சம் 2 லி., தண்ணீராவது குடிக்க வேண்டும்.

கனமான மேக்கப்புக்கு பதிலாக கிளிசரின், வைட்டமின் சி உள்ள 'பிபி கிரீம்' பயன்படுத்தலாம். இவை சரும நிறத்தை மேம்படுத்துவதுடன், ஈரப்பதமாக வைப்பதால் முகம் பளீரென இருக்கும்.

சாதாரண நேரத்தில் காஜல், ஐலைனர், சன்ஸ்கிரீனை மட்டுமே பயன்படுத்தலாம். கண்களில் காஜல் தீட்டினால் உங்களின் தோற்றத்தை மேலும் மெருக்கேற்றிக் காட்டும்.


தூங்குவதற்கு முன் உங்கள் மேக்கப்பை முழுமையாக நீக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் உள்ள மேக்கப், அழுக்கு, எண்ணெய் பசையை முழுமையாக அகற்ற வேண்டும்.

கிரீம்களை பயன்படுத்தும்போது உங்களின் சருமத்துளைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும். அப்போது துளைகள் எளிதாக சுவாசிப்பதால், சருமம் புத்துணர்ச்சியுடன், அழகாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...