வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ஏற்ற நமது அண்டை நாடுகள்!
இலங்கை... தமிழர்கள் அதிகம் உள்ள தீவு தேசம்; கலாச்சார பாரம்பரியம், அற்புதமான இயற்கைக்காட்சிகள், அழகான கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
115 தீவுகளைக் கொண்ட சீஷெல்ஸ் உலகப் பரபரப்பில் இருந்து எஸ்கேப் ஆக சிறந்த இடம்.
இந்தியாவுக்கு நெருக்கமான நாடுகளில் ஒன்று வியட்நாம். பெரிய பெரிய குன்றுகளுடன் காணப்படும் ஹலாங் கடற்கரை இங்கு நம்பர் 1 சுற்றுலா தளம். இங்கு படகில் செல்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
தாய்லாந்து... உலகச் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நாடுகளில் ஒன்று. மலிவான வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு பெயர் போனது.
அசர்பைஜான்... இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பழைய வரலாற்று கால கட்டிடங்களை பார்ப்பதன் மூலம் நூறாண்டுகள் பின்னோக்கி செல்லலாம்.
நடுத்தர மக்களும் உலக சுற்றுலா செல்லக் கூடிய அளவு விமானப் பயணம், விசா பிராசஸ் எளிதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.