விநாயகருக்கு படைக்க... ராகி இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் வாங்க !

தேவையானப் பொருட்கள்ராகி மாவு: 1 கப், தேங்காய்: 1/2 மூடி, பொட்டு கடலை: 1/4 கப், ஏலக்காய்: 3, வெல்லம்: 1 கப், நெய்: 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை, பாதாம்: 2 டேபிள் ஸ்பூன், உப்பு: தேவையான அளவு

ராகி மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்றாக அழுத்தி பிசைந்து ஆற விடவும்.

தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த விழுதை நன்றாக வதக்கி, கால் கப் அளவுக்கு தண்ணீர் அல்லது பால் சேர்த்து கிளறவும்.

தண்ணீர் வற்றியவுடன், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து கிளறினால் பூரணம் ரெடி.

ராகி மாவை மீண்டும் கைகளால் அழுத்தி சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். கைகளால் மாவை வடை போல் தட்டவும்.

தட்டிய மாவின் நடுவில் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து அப்படியே மடித்து ஓட்டைகளின்றி மூட வேண்டும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திர தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்தால், சுவையான, சத்தான ராகி இனிப்பு கொழுக்கட்டை ரெடி.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...