சூடான பால் - குளிர்ந்த பால் எது நல்லது?
சூடான பாலில் உள்ள அமினோ அமிலங்கள் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக வைக்க உதவும். இதனால் தூக்கம் எளிதில் வரும்.
சூடான பால் அருந்துவது உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கும். சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது. முதியோர் சூடான பாலை இரவில் அருந்துவது நல்லது.
சூடான பாலில் தேன் கலந்து குடிப்பது இருமல், சளி போக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைக்கப் பயன்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
காலை எழுந்ததும் குளிர்விக்கப்பட்ட பால் அருந்துவது வயிற்றுப் புண்களை ஆற்ற சரியான மருந்து. பாலில் உள்ள டயட்டரி ஃபைபர் மலக்குடலைத் தூண்டி மலம் வெளியேற உதவும்.
சாப்பாட்டு வேளைக்கு இடையே ஏற்படும் பசியைப் போக்க குளிர்ந்த பால் உதவும்.
குளிர்விக்கப்பட்ட பாலில் உள்ள லேக்டோஸ் சீக்கிரம் உடலில் சென்று சேரும். இது பற்கள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.