PUBLISHED ON : டிச 02, 2018

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடவும், அவர்களுக்கு விளையாட்டின் மூலம் கற்பிக்கவும், 'மிகோ 2' என்ற, 'ரோபோ'வை, 'எமோடிக்ஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஓராண்டுக்கு முன், 'மிகோ' எனும் ரோபோவை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது அறிமுகமாகும், 'மிகோ 2' முந்தைய தயாரிப்பை விட பல மடங்கு அதிக வசதிகளுடன் வருகிறது.
பார்க்க, கேட்க, உணர, பேச, முகங்களை அடையாளம் கண்டுகொள்ள, பெயர்களை நினைவில் கொள்ள என, பல விஷயங்களில் இந்த புதிய ரோபோ கில்லாடி.
குழந்தைகளுடன் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய இந்த ரோபோ, பொது அறிவு, பள்ளிப் பாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு உதவியாக இருக்கும்.
மிகோ 2 ஆப் மூலம், வை பை நெட்வொர்க்கில், ரோபோவை ஒருமுறை கனெக்ட் செய்து விட்டால் போதுமானது.
டிச., 15 - 2019 ஜன., 15 வரை, ஹாம்லேஸ் இந்தியாவின் விற்பனை மையங்களில் கிடைக்கும். அதன் பிறகு, அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.
விலை: 24,999 ரூபாய்.
