/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
எழுத்தாளர் மாஸாஹிரா கனியின் நூல்கள் வெளியீடு
/
எழுத்தாளர் மாஸாஹிரா கனியின் நூல்கள் வெளியீடு
நவ 13, 2025

எழுத்தாளர் மாஸாஹிரா கனியின் நூல்கள் வெளியீடு..
எழுத்தாளர் மஸாஹிரா கனியின் 'விடத்தல் தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலிம் வரலாறு' மற்றும் 'வேரெழுது' கவிதைத் தொகுப்பு ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 9ஆம் தேதி கொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்வித் திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில், மேமன்கவி தலைமை வகித்ததுடன் பிரதம அதிதியாக தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் , கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், சிறப்பு அதிதிகளாக ,சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒலி, ஒளிபரப்பாளர் உமர் லெப்பை யாகூப் , சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், கலைமாமணி நஜ்முல் ஹுசைன் இளநெஞ்சன் முர்ஷுதீன், சட்டத்தரணி மகாலிங்கம் சிவகுரு, ஓய்வு பெற்ற கம்பஹா மெனுவாங்கொடை மாவட்ட வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைமதி யாசின், ஜீலான் மத்திய கல்லூரியின் அதிபர் ஹலீம் மஜீத் , ரோயல் கல்லூரி ஆசிரியர் சரினா முஸ்தபா, தொழிலதிபர் சாஹிர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை முஹைஸ் கனி வழங்க, நூல்களின் முதற்பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வாழ்த்துக் கவிதைகளை கவிஞர்களான றுக்ஷானா யஹ்யா, நஜீமுல் ஹுஸைன், கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் ஆகியோர் வழங்கினர். வாழ்த்துரையை இளநெஞ்சன் முர்சுதீன் வழங்கினார்.
நூல்களுக்கான நயவுரைகளை எம்.ஸ்ரீஸ்கந்த குமார் மற்றும் முல்லை முஸ்ரிபா ஆகியோர் நிகழ்த்தியதுடன் நிகழ்வினை முனாஸ் கனி தொகுத்து வழங்கினார்.
விழாவில் ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் பங்கேற்றனர்
Advertisement

