
மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கத்தார் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸாஹிரியன்ஸ் புட்சல் ஃப்ரென்ஸி சீசன்-6 (Zahirians Futsal Frenzy-Season 6) கால்பந்து போட்டி கேம்பிரிட்ஜ் பாடசாலையில் நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டி VETERAN, ELITE என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டியில் எலைட் (ELITE) பிரிவில் மாரூன்ஸ் ரெட் கால்பந்து கழகமும் VETERAN பிரிவில் பதுரியன்ஸ் கால்பந்து கழகமும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை எவராக்ஸ் கால்பந்து கழகமும், தோஹா வெட்டரன்ஸ் கால்பந்து கழகமும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், போட்டி தொடரில் அஸ்லம் அலி, பெரோஸ் நிஜாம் (Feroz Nizam) சிறந்த கோல் கீப்பர்களாகவும், ரிபாஸ் மற்றும் இஜாஸ் சிறந்த வீரர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். போட்டி தொடரில் பல முன்னாள் மாணவர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்த மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் கத்தார் கிளை அமைப்பினருக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- கத்தாரிலிருந்து நமது வாசகர் ஜே. எம். பாஸித்
Advertisement

