இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 1 லட்சம் பேருக்கு புற்றுநோய்க்கு வாய்ப்பு

தமிழக புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், மாநிலளவில் புற்றுநோய் பாதிப்புகள் கண்காணிக்கப்படுகின்றன.

2021 வரை உறுதி செய்யப்பட்ட புற்றுநோய் பாதிப்பு விவரங்களும், 2022 - 2025 வரை எதிர்பார்க்கப்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகள் குறித்த கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

2012ல் 53,022 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். 2021ல் 76,968 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மாநிலளவில், 2022 முதல் புதிதாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரம், தமிழக புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ் தொகுக்கப்படுகிறது.

தவிர, 2025 இறுதிக்குள் புதிய புற்றுநோய் பாதிப்பு பட்டியலில், புதிதாக 1,00,097 பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, வாய், பெருங்குடல், வயிறு, நுரையீரல், நாக்கு ஆகிய ஐந்து புற்றுநோய்கள் அதிகம் காணப்படுகின்றன.

மேலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய், கருமுட்டை, கார்பஸ்யூட்டெரி புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை, பின்பற்ற வேண்டியது அவசியம்.