தைராய்டு புற்றுநோய் குறித்து அறிவோமா?
தைராய்டு என்பது, கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவிலுள்ள உறுப்பு.
தைராய்டில் கட்டி ஏற்படும். சாதாரண கட்டியாகவும் இருக்கலாம்; புற்றுநோய் கட்டியாக இருக்கலாம்.
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து அறியலாம்.
அதிலும் சந்தேகம் இருப்பின், எப்.என்.எஸ்.சி.,ஊசி போட்டு அடுத்தகட்ட பரிசோதனைகள் செய்யவேண்டும்.
புற்றுநோய் இருப்பது உறுதியானால், தைராய்டு சிறப்பு நிபுணர்களை அணுகி அகற்ற வேண்டும்.
கழுத்து பகுதியில் வீக்கம், குரல் மாறி பேசுவதில் சிரமம், சில நேரங்களில் மூச்சுவிடுவதில் சிரமம், உணவு விழுங்குவதில் சிக்கல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.